இலங்கை அரசியலில் அதிரடி திருப்பமாக நாடாளுமன்றத்தை திடீரென கலைத்து, அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தலைநகர் கொழும்பில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட, கோத்தபய ராஜபக்சே, நாடாளுமன்ற கலைப்பு குறித்த சிறப்பு அரசாணையிலும் கையெழுத்திட்டார்.
இலங்கை நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் இன்னும் 6 மாதங்கள் உள்ள நிலையில், பொதுத்தேர்தலில், அதிக பலத்துடன் மீண்டும் வெற்றி பெற்று, ஆட்சியை
தக்க வைப்பதற்காக, கோத்தபய ராஜபக்சே, புதிய வியூகம் வகுத்துள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, 225 உறுப்பினர்கள் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்திற்கு ஏப்ரல் 25 - ம் தேதி, பொதுத்தேர்தல் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.