குடியுரிமை சட்டம் குறித்து சொல்லி கொடுத்து ரஜினிக்கு தெரிய வேண்டியது எதுவும் இல்லை என்றும் அவர் ஒரு லெஜெண்ட் என்று, அவரை சந்தித்துப் பேசிய இந்திய ஹஜ் அசோஷியேஷன் தலைவர் அபுபக்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை போயஸ் தோட்டத்தில், நடிகர் ரஜினிகாந்தை அவரது அழைப்பின்பேரில் அபுபக்கர் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரஜினிகாந்தை சந்தித்து, டெல்லி கலவரத்திற்கு எதிராக குரல் கொடுத்ததற்கு நன்றி தெரிவித்ததாகவும், குடியுரிமை திருத்த சட்டம் குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டதாகவும் தெரிவித்தார். ரஜினிகாந்த் தமிழர்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் சூப்பர் ஸ்டார் என அபுபக்கர் கூறினார்.
இதனிடையே நடிகர் ரஜினிகாந்த் தனது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டாம் என்று கூறியதாக கூறப்படுகிறது. இது குறித்து பேச ரஜினியை, சென்னை போலீசின் நுண்ணறிவுப்பிரிவு துணை ஆணையர் திருநாவுக்கரசு சந்தித்துள்ளார்.