செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சற்றுமுன்

அமெரிக்கா- தாலிபான் இடையே இன்று அமைதி ஒப்பந்தம் கையெழுத்து... முடிவுக்கு வரும் 18 ஆண்டு போர்

Feb 29, 2020 12:37:57 PM

18 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வரும் போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், அமெரிக்கா மற்றும் தலிபான்கள் இடையே இன்று அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இதில் பாகிஸ்தான், இந்தியா உள்ளிட்ட 30 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். 

ஆப்கானிஸ்தானில் அரசு படைகளுக்கும், தலிபான் தீவிரவாதிகளுக்கும் இடையே கடந்த 2002ம் ஆண்டுமுதல் போர் நடைபெற்று வருகிறது. இதில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் அரசு படைக்கு உதவும் வகையில் 14 ஆயிரம் அமெரிக்க வீரர்கள் ஆப்கானில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நீண்ட காலமாக நடந்து வரும் இந்த சண்டையை முடிவுக்கு கொண்டு வரவும், தனது வீரர்களை வாபஸ் பெறவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவு செய்தார். இதையடுத்து, தலிபான்கள்- அமெரிக்கா இடையே கடந்த சில மாதங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இதில் சுமுக முடிவு ஏற்பட்டதை தொடர்ந்து, ஆப்கானிஸ்தானில் போர் நிறுத்தம் இருந்து வருகிறது.

இந்நிலையில், அமெரிக்கா - தலிபான்கள் இடையே கத்தார் நாட்டின் தோஹாவில் இன்று மாலை அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. இந்த உடன்படிக்கை மூலம், ஆப்கானிஸ்தானில் 18 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்கப் படைகள் திரும்பப் பெறப்படும்.

ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிகழ்ச்சியில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ உள்ளிட்ட 30 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.

இந்தியா சார்பில் வெளியுறவு செயலர் ஹர்ஷ் வர்தன் ஷிரிங்லா கலந்து கொள்கிறார். முன்னதாக காபூல் சென்ற அவர், ஆப்கனில் அமைதி மற்றும் ஸ்திரமான நிலை ஏற்படுவதற்கு இந்தியாவின் பரிபூரண ஆதரவை தெரிவித்தார்.

ஆப்கன் வெளியுறவு அமைச்சரை சந்தித்த அவர், அமெரிக்கா-தலிபான் இடையிலான அமைதி உடன்படிக்கை குறித்த இந்தியாவின் கண்ணோட்டம், ஆப்கானிஸ்தான் வளர்ச்சி பெற இந்தியாவின் பங்களிப்பு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஆப்கானிஸ்தானில் அமைதி, நல்லிணக்கம் ஏற்படுவதில் முக்கிய பங்காற்றி வரும் இந்தியா, அந்த நாட்டில் பல்வேறு மறுசீரமைப்புத் திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. ஆப்கனின் புதிய நாடாளுமன்ற கட்டடத்தையே இந்தியா தான் உருவாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement
தனியார் மருத்துவமனையில் பணம் கையாடல் செய்த பெண் காசாளர் கைது
திருச்சியில் அளவுக்கு அதிகமாக லோடு ஏற்றி வந்த லாரி பாரம் தாங்காமல் கவிழ்ந்து விபத்து
கோவையில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்த தலைமைச் செயலாளர்
திருப்பூரில் கால்நடை மருந்தகத்தில் மோதலை தொடர்ந்து இருதரப்பினர் மீது வழக்குப்பதிவு
சென்னை கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டிகள் தொடக்கம்..
போதை பொருட்கள் வைத்திருந்ததாக தனியார் கல்லூரி மாணவர்கள் கைது.!
விழுப்புரம் அருகே வாகன சோதனையின் போது 491 கிலோ குட்கா பறிமுதல் - ஓட்டுனர் தப்பி ஓட்டம்
அ.தி.மு.க. நிர்வாகிக்கு வெட்டு, தி.மு.க. கவுன்சிலர் கணவர் கைது..
பரியேறும் பெருமாள் படத்தில் நடித்த "கருப்பி" என்ற பெண் சிப்பிபாறை நாய் பேருந்து மோதி உயிரிழப்பு.!
பிரியாணியில் புழு இருந்த விவகாரம் - உணவகத்திற்கு அபராதம் விதித்த உணவு பாதுகாப்புத்துறை.!

Advertisement
Posted Nov 06, 2024 in தமிழ்நாடு,Big Stories,

மாற்றுப் பயிர் சாகுபடிக்கு மகத்தான சாய்ஸ் டிராகன் பழ சாகுபடியில் லாபமீட்டும் விவசாயிகள் மாற்று சாகுபடிக்கு ஏற்ற பயிர்!

Posted Nov 06, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

காட்டுக்குள் பதுங்கி பெண்கள் வேட்டை காமுகன் கால் உடைந்தது..! சீரியல் ரேப்பிஸ்ட் சிக்கியது எப்படி ?

Posted Nov 05, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தேனீக்கள் வளர்ப்பது இவ்வளவு சுலபமா..? மாதம் ரூ.50 ஆயிரம் லாபம்..! ஒரு நாள் பயிற்சி தர்ராங்க..

Posted Nov 05, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கை கொடுக்கும் காளான் வளர்ப்பு.. வாய்ப்பை வழங்கும் வேளாண் பல்கலை..

Posted Nov 05, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

50 கிராம் நகைக்காக மூதாட்டியை கொன்று டிராலியில் அடைத்த குடும்பம்..! நெல்லூர் டூ மீஞ்சூர் ரெயில் திகில்..


Advertisement