அதிமுக, திமுக ஆகிய திராவிட கட்சிகள் அல்லாத கட்சிகளோடு, மக்கள் நீதி மய்யம், கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக, அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார்.
மக்கள் நீதி மய்யம் மூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைத்திருப்பதையொட்டி, சென்னை தியாகராய நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில், பத்திரிக்கை மற்றும் மின்னணு ஊடக செய்தி ஆசிரியர்களுடன், கமல்ஹாசன் கலந்துரையாடல் நிகழ்த்தினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய கமல், மக்கள் நீதி மய்யம் தலைமையில் தான் கூட்டணி அமைய வேண்டும் என்பது இல்லை என்றும், பேச்சுவார்த்தையில் எப்படி உடன்பாடு எட்டப்படுகிறதோ அதை பொறுத்து கூட்டணி அமையும் என்றார்.
எம்ஜிஆர், சிவாஜி இருக்கும்போதே அவர்களின் இடத்தை பிடித்தவர்கள் என்பதால், அரசியலிலும் அந்த இடத்தை பிடிப்போம் என கமல்ஹாசன் தெரிவித்தார்.