இந்திய முதலீட்டாளர்கள், அமெரிக்காவில் முதலீடு செய்ய, ஆர்வமாக உள்ளதாக அந்நாட்டின் அதிபர் டொனால்டு டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 2 நாள் பயணத்தின் நிறைவாக புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குறிப்பாக எரிசக்தி துறையில், முதலீடு செய்ய முடிவு செய்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.
இந்திய பயணம் வெற்றிகரமாக அமைந்தது என மகிழ்ச்சி தெரிவித்த டிரம்ப், உலகிலேயே எரிசக்தி துறையில் அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது என்றார்.
அமெரிக்காவிடம் இருந்து ஏராளமான ஆயுத தளவாடங்களை வாங்க, இந்தியா ஒப்புக்கொண்டுள்ளதாக கூறிய அவர், சர்வதேச அளவில் தலை தூக்கி உள்ள தீவிரவாதத்தை ஒழிப்பதே தங்கள் இலக்கு என்றார். அமெரிக்காவில் கோரானோ வைரஸ், கட்டுக்குள் உள்ளதாக கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த போது, டிரம்ப் தெரிவித்தார்.