சென்னை அடுத்த செம்பரம்பாக்கத்தில் பெட்ரோல் நிலையத்தில் டீசல் நிரப்பும் போது கண்டெய்னர் லாரி ஓட்டுநரின் உடலில் தீப்பற்றி எரிந்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
செம்பரம்பாக்கம் வழியாகச் சென்ற கண்டெய்னர் லாரி ஓட்டுநர் ஒருவர், அங்குள்ள பெட்ரோல் நிலையத்திற்கு டீசல் நிறப்புவதற்காகச் சென்றார்.
டீசல் சரியாக நிறப்பப்படுவதை உறுதி செய்வதற்காக கண்டெய்னர் ஓட்டுநரே பங்க் ஊழியரிடம் இருந்து டீசல் கன்னை வாங்கிப் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென டீசல் டேங்கில் இருந்து தீ வெளியேறியதை அடுத்து, கண்டெய்னர் லாரி ஓட்டுநரின் உடலில் தீப்பற்றியது. உடலில் தீ பற்றிய படியே அவர் அங்கிருந்து ஓடினார்.
இதனால் அலறித்துடித்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் 30 சதவீத தீக்காயங்களுடன் அனுமதித்தனர். கண்டெய்னர் லாரி ஓட்டுநர் உத்திரபிரதேச மாநிலம் கேராய் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ்குமார் சிங் என்பது தெரியவந்துள்ளது.