என்பிஆர் தொடர்பாக மத்திய அரசுக்குக் கடிதம் எழுதி இருப்பதாக ஈபிஎஸ்-ஓபிஎஸ் கூட்டறிக்கை விட்டிருப்பது யாரை ஏமாற்றுவதற்கான நாடக ஒத்திகை? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் என்ன பாதிப்பு சொல்லுங்கள் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் கேட்டதாக மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் இப்போது என்பிஆர் கணக்கெடுப்பில் தாய்மொழி, தந்தை, தாயார் பெயர், பிறந்த இடம், பிறந்த தேதி ஆகியவற்றைத் தவிர்க்கக் கோரியும் ஆதார், கைபேசி எண், வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம் ஆகிய ஆவணங்களைக் கேட்க வேண்டாம் என்று கோரியும் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியிருப்பதாக, ஈபிஎஸ்-ஓபிஎஸ் கூறியிருப்பது ஏன் என மு.க.ஸ்டாலின் வினவியுள்ளார்.
இதன் மூலம், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் பாதிப்பு என்ற தி.மு.க.வின் வாதத்தை முதலமைச்சர் ஒப்புக் கொண்டுள்ளதாகவும் ஸ்டாலின் கூறியுள்ளார்.