புதிய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியான 8 வாரங்களுக்கு பின்னரே அமேசான் பிரைம் வீடியோ, நெட்பிளிக்ஸ் உள்ளிட்ட டிஜிட்டல் தளங்களில் வெளியிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் நடிகர் டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணாசாலையில் உள்ள அச்சங்கத்தின் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்துடன் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 6 முக்கிய தீர்மானங்களை விவரித்தார்.