மானியமில்லா சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இன்று முதல் 147 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
குடும்பம் ஒன்றுக்கு மானிய விலையில் ஆண்டுக்கு 12 எரிவாயு சிலிண்டர்கள் அளிக்கப்படுகின்றன. அதன்பிறகு வாங்கப்படும் சிலிண்டர் ஒவ்வொன்றும் சந்தை விலையில் மானியமில்லாமல் வழங்கப்படுகின்றன.
ஜனவரி 1ம் தேதிக்கு பிறகு அதன் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தவில்லை. இந்நிலையில் பொதுத்துறை நிறுவனங்கள், மானியமில்லா சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை உயர்த்தியுள்ளன. இதன்படி, சென்னையில் அதன் விலை 147 ரூபாய் அதிகரித்து ரூ. 881 ரூபாய்க்கு அளிக்கப்படுகிறது.