நிர்பயா வழக்கில், நான்கு குற்றவாளிகளையும் தூக்கிலிடுவதற்கான புதிய தேதியை, டெல்லி திகார் சிறை நிர்வாகம், விசாரணை நீதிமன்றத்தை அணுகிப் பெற்றுக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் நால்வரையும் தனித்தனியாக தூக்கிலிட அனுமதி மறுத்து, தூக்குத் தண்டனையை நிறைவேற்ற தடை விதித்த நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மத்திய, மாநில அரசுகள் சார்பில் தாக்கலான மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த நீதிபதி பானுமதி தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு, இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
நான்கு குற்றவாளிகளுக்கும் சட்ட நிவாரணம் பெற்றுக் கொள்வதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் முடிந்துள்ள நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பதிலளிக்குமாறு குற்றவாளிகள் தரப்புக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.