செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சற்றுமுன்

3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி... நியுசிலாந்து வெற்றி பெற 297 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா

Feb 11, 2020 02:18:19 PM

3ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், நியூசிலாந்த் அணிக்கு 297 ரன்களை இந்தியா வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. 

மவுன்ட் மெளன்கனோய் (Mount Maunganui) பகுதியில் நடைபெறும் 3ஆவது  ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், டாஸ் வென்ற நியூசிலாந்த் அணி,  பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு,  புதுமுக வீரர் மயங்க் அகர்வாலை 1 ரன்னிலும், கேப்டன் விராட் கோலியை 9 ரன்னிலும் ஆட்டமிழக்க செய்து நியூசிலாந்த் பந்துவீச்சாளர்கள் அதிர்ச்சியளித்தனர்.

3ஆவது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த பிருத்வி ஷா, ஸ்ரேயாஸ் அய்யர் ஜோடி நம்பிக்கை அளிக்கும் வகையில் விளையாடியது. சிறப்பாக விளையாடிய பிருத்வி ஷா, 42 பந்துகளில் 40 ரன்களை எடுத்திருந்தநிலையில் ரன்அவுட் ஆகி வெளியேறினார்.

இதன்பின்னர் 4ஆவது விக்கெட்டுக்கு கைகோர்த்த ஸ்ரேயாஸ் அய்யரும், கே.எல். ராகுலும்  பொறுப்பை உணர்ந்து விளையாடினர். சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்த ஸ்ரேயாஸ் அய்யர் 62 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுமுனையில், மணிஷ் பாண்டேயுடன் சேர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திய கே.எல்.ராகுல், ஒருநாள் போட்டி அரங்கில் தமது 4ஆவது சதத்தை பதிவு செய்தார்.

112 ரன்களில் கே.எல். ராகுலும், அவரைத் தொடர்ந்து 42 ரன்களில் மணிஷ் பாண்டேயும் ஆட்டமிழந்து வெளியேறினர். பின்னர் வந்த வீரர்கள் அதிரடியாக விளையாடி ரன்களை குவிக்காமல் பந்துகளை வீணடித்ததால், 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 296 ரன்களை மட்டுமே இந்திய அணியால் எடுக்க முடிந்தது. இதன்பின்னர் 297 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு நியூசிலாந்த் அணி பேட்டிங் செய்து வருகிறது.

தொடக்க ஆட்டக்காரர் கப்தில், நிகோல்ஸ் ஜோடி ஆரம்பம் முதலே அதிரடியில் ஈடுபட்டது.  இருவரும் இந்திய பந்துவீச்சாளர்களின் பந்துகளை நாலாபுறமும்  சிதறடித்தபடி இருந்தனர். அதிரடியாக விளையாடி 29 பந்துகளில் அரைசதம் அடித்த கப்தில், 66 ரன்களை எடுத்திருந்த நிலையில் சாகல் பந்தில் ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து பொறுப்பாக விளையாடி நிகோல்ஸும் அரைசதம் கடந்தார். 


Advertisement
திருச்சி காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 10ஆம் வகுப்பு மாணவர்கள்
பீகாரில் இருந்த கோவைக்கு வாங்கி வரப்பட்ட கள்ளத்துப்பாக்கி பறிமுதல்
பண்ருட்டி அருகே கஞ்சா விற்பனையை கண்காணிக்க சென்ற தனிப்படை எஸ்.ஐ.-யை தாக்கிய கும்பல்
மரக்காணம் பக்கிங்காம் கால்வாயில் தவறி விழுந்த அண்ணன் தம்பிகள் 3 பேர் மாயம்
கோவை அருகே மக்கள் வசிப்பிடப் பகுதியில் கடமான்கள் தஞ்சம்
கேரளத்தில் மேற்குவங்க பெண்ணை பலாத்காரம் செய்த அசாம் மாநிலத்தை 2 பேர் கைது
எண்ணூர் அனல் மின் நிலைய திட்டம் மின் உற்பத்தியை அதிகரிக்கும் - மின்வாரியம்
கன்னியாகுமரி மாவட்டம், அருமனை அருகே 2 டூவீலர்கள் நேருக்கு நேர் மோதி விபத்து
ஆன்லைன் லாட்டரி விற்பனை- ஒரே குடும்பத்தினர் 4 பேர் கைது
திருக்குறளால் திருவள்ளுவர் உருவம் வரைந்த அரசு நடுநிலைப் பள்ளி மாணவி

Advertisement
Posted Dec 24, 2024 in தமிழ்நாடு,Big Stories,

எம்.ஜி.ஆர். 37 வது நினைவுதினம்

Posted Dec 24, 2024 in இந்தியா,Big Stories,

மரம் அறுக்கும் எந்திரத்தால் வீடு புகுந்து கழுத்தை அறுத்த “டெலிவரி டேஞ்சர் பாய்”..! தனியாக இருக்கும் பெண்களே உஷார்

Posted Dec 24, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ராமேஸ்வரத்தில் குளிக்கிறீங்களா.. உடை மாற்றும் அறையில் உஷார் இருட்டில் சிமிட்டிய 3 கண்கள் ..! ஐ.டி . பெண் பொறியாளர் தரமான சம்பவம்..!

Posted Dec 22, 2024 in வீடியோ,Big Stories,

ஒத்த ஆளு மொத்த உயிரையும் காத்துருக்கா.. அவள் எங்கள் தெய்வம்..! பேருந்தில் மின்சாரம் பாய்ந்தது எப்படி ?

Posted Dec 22, 2024 in வீடியோ,Big Stories,

அவரு ஆபீசரா இருக்கலாம்.. அதுக்காக மகளை கேட்பாரா ?.. ஜெயிலருக்கு செருப்படி ஏன் ? ஏறி மிதித்து சட்டையை கிழித்த சம்பவம்


Advertisement