முதுநிலை ஆசிரியர் பணிக்கான கலந்தாய்வு மாவட்ட வாரியாக பிப்ரவரி 9 மற்றும் 10-ம் தேதிகளில் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் இருந்து தேர்ச்சி பட்டியல் பெறப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், பணி ஒதுக்கீடு ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு வரும் 9 மற்றும் 10-ம் தேதிகளில் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் நடத்தப்படும். எனவே, தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள் அனைவரும் உரிய சான்றிதழ்களுடன் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.