சென்னை ஐ.ஐ.டி.யில் ரோபோட்டிக் ஆய்வகம் அமைக்க அதன் முன்னாள் மாணவர்கள் ஒரு கோடி ரூபாய் நிதியுதவி அளித்திருக்கின்றனர்.
சென்னை ஐ.ஐ.டி.யின் பொறியியல் வடிவமைப்புத் துறையின் கீழ் புதிதாக அதிநவீன வசதிகளுடன் கூடிய ரோபோட்டிக் ஆராய்ச்சி மற்றும் கற்பித்தல் ஆய்வகம் அமைக்க ஐ.ஐ.டி. நிர்வாகம் முடிவு செய்திருந்தது.
இதையறிந்த முன்னாள் மாணவர்கள், தாமாக முன்வந்து ஒரு கோடி ரூபாயை, தங்களது பங்களிப்பாக ஐ.ஐ.டி. நிர்வாகத்திடம் வழங்கி உள்ளதாக, கூறப்பட்டுள்ளது.
கற்பித்தல் மட்டுமல்லாது, மருத்துவத் துறையில் பயன்படும் வகையில் புதிய ரோபோக்களை வடிவமைத்தல், நீருக்கு அடியில் பயணிக்கும் வகையிலான ரோபோக்கள், வானத்தில் பறந்து செல்லும் வகையிலான ரோபோக்கள், பிற ரோபோக்களுக்கான மென்பொருள் கட்டமைப்பு போன்றவையும் உருவாக்கப்பட உள்ளதாக ஐ.ஐ.டி. நிர்வாகம் தெரிவித்துள்ளது.