நீட் தேர்வு தொடர்பாக ஏற்கனவே நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால், அந்த வழக்கிற்கு வலுசேர்க்கும் வகையிலேயே கூடுதலாக மற்றொரு வழக்கு தொடரப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
அகரம் அறக்கட்டளை சார்பில் சென்னை தியாகராயநகரில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மாணவர்களுக்கு பக்கபலமாக அரசு இருந்து வருகிறது என்றார்.
சமுதாயத்தில் உயர் கல்விக்கு எப்படி செல்வது என்று யோசித்துக் கொண்டிருப்பவர்களுக்கு அகரம் பவுன்டேசன் போன்ற அறக்கட்டளை உதவியாக இருக்கிறது என்று அவர் பாராட்டினார். அறக்கட்டளையை நடத்தி வரும் நடிகர் சூர்யாவுக்கும் அமைச்சர் செங்கோட்டையன் வாழ்த்து தெரிவித்தார்.
Watch Polimer News Online at https://bit.ly/2Qrv39p