திண்டுக்கல் மாவட்டம் தண்ணீர் பந்தம்பட்டியில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் மாணவிகள், பேராசிரியைகளை செல்போனில் படம் எடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து அக்கல்லூரி பேராசிரியர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
பொள்ளாச்சியை சேர்ந்த அருள்செல்வம் என்ற தற்காலிக பேராசிரியர் மீது முதல்வரின் தனிப் பிரிவு, மதுரை மண்டலக் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் அலுவலுகம் மற்றும் போலீசிடம் புகார் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து விசாரணையின் முடிவில் கல்லூரி பொறுப்பு முதல்வர் பேராசிரியர் அருள்செல்வத்தை பணீநீக்கம் செய்து உத்தரவிட்டார்