பெங்களூரூவில், நடிகை தமன்னாவைப் பற்றி 7ம் வகுப்பு பாடத்தில் சேர்த்த சிந்தி என்ற தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
‘சிந்த் பிரிவினைக்கு பிறகு இந்திய மக்களின் வாழ்க்கை' என்ற பாடத்தில் தமன்னா பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ள நிலையில், நடிகை தமன்னா குறித்து தங்கள் குழந்தைகள் கற்க வேண்டிய விஷயம் என்ன உள்ளது என்று கேள்வி எழுப்பிய அவர்கள் இதுகுறித்து ஆங்கில வழி பள்ளிகளுக்கான நிர்வாகத்திடம் புகார் தெரிவித்துள்ளனர்.