தமிழகத்தில் 40 நாட்கள் விடுமுறைக்கு பின், நாளை மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
அனைத்து பள்ளிகளிலும் முழு 'அட்டெண்டன்ஸ்' பதிவாகும் வகையில், ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரை 100 சதவீதம் மாணவர்களை நேரடியாக வர வைத்து, பாடங்களை நடத்த பள்ளிக்கல்வித் துறை அனுமதி அளித்துள்ளது.
வீடுகளில் முடங்கிக் கிடந்த ஒரு கோடிக்கும் மேற்பட்ட மாணவர்கள், ஊரடங்கு நீங்கியதால், பள்ளிக்கு வர சுறுசுறுப்புடன் தயாராகி வருகின்றனர். கொரோனா பரவல் காரணமாக, இம்மாதம் வரை பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பெரும்பாலானவை, இன்றுடன் விலக்கிக் கொள்ளப்படுகின்றன .
நாளை முதல் ஊரடங்கு தளர்வுகள் அமலாகின்றன.