புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கொண்ட கட்டிடத்தை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி , அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
பிறகு மாணவிகளிடையே பேசிய அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, வரும் 31-ஆம் தேதி வரை உள்ள விடுமுறை காலத்தை விடுமுறை என எடுத்துக்கொள்ளாமல் கல்வி தொலைக்காட்சி மூலமாகவும், யூ டியூப் வாயிலாகவும் பாடத்தில் கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.