தமிழகத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது குறித்து, வருகிற 15-ந் தேதி முதலமைச்சருக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பள்ளிக்கல்வித்துறை சமர்ப்பிக்கும் அறிக்கை அடிப்படையில், ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளை திறப்பது குறித்து முதலமைச்சர் முடிவு செய்வார் எனத் தெரிவித்தார்.
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் அனைத்து கட்சிகளின் ஒத்துழைப்போடு வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.