எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி உள்பட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான, நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும்.
இதற்கான விண்ணப்பப் பதிவு, கடந்த ஜூலை 13 ஆம் தேதி முதல் இணையதளம் வழியாக நடைபெற்று வருகிறது. நீட் தேர்வு விண்ணப்பங்களில் திருத்தங்கள் செய்ய வரும் 11 முதல் 14 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலால், நீட் தேர்வு நடக்கும் நகரங்களின் எண்ணிக்கை 155-ல் இருந்து 198 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. தேர்வு மையங்கள் எண்ணிக்கையும் உயர்த்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.