10 மற்றும்11 ஆம் வகுப்பை நிறைவு செய்துள்ள மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழில் ஆல் பாஸ் என்று அச்சிட்டு வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக மாநில பாடத்திட்டத்தின் கீழ் கடந்த 2020-2021-ம் கல்வியாண்டில் 10 மற்றும் 11-ஆம் வகுப்பு பயின்ற மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது.
இந்நிலையில் அதனைக் குறிப்பிடும் வகையில் "அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றுள்ளார்" என அச்சிட்டு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்க தேர்வுத்துறைக்கு, பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா உத்தரவிட்டுள்ளார்.