ஜூலை 31-ந் தேதிக்கு பின்னர் தான் உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை தொடங்கும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
சென்னை தரமணியிலுள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரியில் நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கையை இணையவழியில் தொடங்கி வைத்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 51 அரசு பாலிடெக்னிக் கல்லூரியிலுள்ள 18 ஆயிரத்து120 இடங்களுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றார்.
மேலும், மாநில பாடத்திட்டதில் படித்த மாணவர்களின் பத்து மற்றும் 11-ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் கல்லூரியில் சேர்ப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது எனவும் அமைச்சர் கூறினார்.