தொடக்கப்பள்ளி முதல் மேல் நிலைப்பள்ளி வரை, 2021 - 22 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை ஆயத்த பணிகளில் ஈடுபட்டுள்ள தலைமை ஆசிரியர்களுக்கு உதவியாக சுழற்சி முறையில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது.
பள்ளி கல்வித்துறை இதற்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. தற்போது, கொரோனா ஊரடங்கு நீடித்து வருவதால், ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இதனிடையே, 1 முதல் 12ஆம் வகுப்பு வரை 2020-21 ஆம் கல்வி ஆண்டில் பயின்ற மாணவர்களுக்கு EMIS_Portal-ல் தேர்ச்சி விவரங்களை உள்ளீடு செய்யும் பணியை துவக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.