பொறியியல் கல்லூரிகள் அங்கீகாரத்தைப் புதுப்பிக்கும் காலக்கெடுவை ஏஐசிடிஇ நீட்டித்துள்ளது.
நாடு முழுவதும் ஏஐசிடிஇ கட்டுப்பாட்டில் நாலாயிரத்துக்கு மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.
இந்தக் கல்லூரிகள் ஆண்டுதோறும் தங்கள் அங்கீகாரத்தைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். பொறியியல் கல்லூரிகள் அங்கீகாரத்தைப் புதுப்பிக்க ஏஐசிடிஇ இணையத்தளத்தில் விண்ணப்பப் பதிவு மார்ச் 9 அன்று தொடங்கியது.
இதற்கான காலக்கெடு நேற்று முடிவடைய இருந்த நிலையில் கொரோனா சூழலில் ஏப்ரல் 23 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.