தமிழகத்தில் 9, 10, 11ஆம் வகுப்புகளின் அனைத்து மாணவர்களும் தேர்ச்சிபெற்றதாக அறிவித்ததை ரத்து செய்யச் சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இது தொடர்பான மனுவில் 11ஆம் வகுப்பில் மாணவர் விரும்பும் பாடப் பிரிவில் சேர்வதற்குப் பத்தாம் வகுப்பில் தேர்வு எழுத வேண்டியது தேவை எனக் குறிப்பிட்டுள்ளது. கலந்தாலோசனையின்றித் தேர்தலைக் கருத்திற் கொண்டு அறிவித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, அரசு எந்த ஆலோசனையும் நடத்தவில்லை என்கிற வாதத்தை ஏற்க முடியாது என்றும், பொதுநல விஷயங்களில் அதிகாரிகள் உரிய ஆலோசனைகளுக்குப் பிறகே முடிவெடுப்பர் என்றும் தெரிவித்தனர்.
11ஆம் வகுப்பில் சேரும் மாணவர்களின் தகுதியைக் கண்டறிய அந்தந்தப் பள்ளிகள் தேர்வு நடத்திக் கொள்ளலாம் என்றும், அதற்குரிய வழிகாட்டு விதிகளைப் பள்ளிக்கல்வித் துறை அறிவிக்க வேண்டும் என்றும் கூறி வழக்கை முடித்து வைத்தனர்.