முன்னேறிய வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டை மாணவர் சேர்க்கையில் பின்பற்றவில்லை என அண்ணா பல்கலைக்கழகம் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
எம்.டெக். படிப்பு மாணவர் சேர்க்கையில், பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கான 10 விழுக்காடு ஒதுக்கீட்டை அண்ணா பல்கலைக்கழகம் வழங்கியதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையிட்டது.
வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டை ஏற்கவும் இல்லை, எந்த ஒரு மாணவர் சேர்க்கையும் நடத்தவில்லை என்றும் விளக்கமளித்தார்.
அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி கடந்த முறை வழங்கிய இட ஒதுக்கீட்டையே இந்த முறையும் பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டார்.