வரும் கல்வியாண்டில் 11ஆம் வகுப்பு சேரும் மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வு நடத்தும் திட்டம் இல்லை என பள்ளிகல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தாண்டு 9, 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்தது.அதனால் வரும் கல்வியாண்டில், பதினொன்றாம் வகுப்பு சேரும் மாணவர்கள் அவர்கள் விரும்பும் பாட பிரிவுகளை தேர்வு செய்ய நுழைவு தேர்வு நடத்தப்படும் என தகவல் வெளியானது.
ஆனால் நுழைவுத்தேர்வு நடத்தும் திட்டம் ஏதும் இல்லை என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.