9, 10, 11ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி என்பதற்கான அரசாணை வெளியிட்டுள்ளது.
கொரோனா காரணமாக தமிழகத்தில் மாணவர்களின் நலன் கருதி பெற்றோரின் கோரிக்கையை ஏற்று அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் பயிலும் 9, 10, 11ஆம் வகுப்பு மாணவர்கள் எவ்வித தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்தார்.
இந்நிலையில், 9 ஆம் வகுப்பு மாணவர்கள் முழு ஆண்டு தேர்வின்றியும், 10, 11ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வின்றியும் தேர்ச்சி பெறுவதாகவும், அவர்களுக்கான மதிப்பெண் மதிப்பீட்டு நெறிமுறைகள் அரசால் விரிவாக வெளியிடப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.