வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் படிப்புகளை வழங்கும் இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கு 2 பட்டங்கள் வழங்குவது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
கூட்டுப் பட்டம், இரட்டைப் பட்டம் வழங்குவதற்காக இந்திய, வெளிநாட்டு உயர்கல்வி நிறுவனங்களிடையான கல்வி ஒத்துழைப்பு தொடர்பான விதிமுறைகளைப் பல்கலைக்கழக மானியக் குழு உருவாக்கி இறுதி செய்துள்ளது.
இதன்படி இந்தியாவில் தரவரிசையில் முதல் நூறு இடங்களில் உள்ள கல்வி நிறுவனங்கள், உலக அளவில் முதல் ஐந்நூறு இடங்களில் உள்ள எந்தவொரு கல்வி நிறுவனத்துடனும் கல்வி ஒத்துழைப்பு உடன்பாட்டைச் செய்துகொள்ள முடியும்.
இந்த நிறுவனங்களில் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு இந்திய, வெளிநாட்டு நிறுவனங்களின் முத்திரைகள் இடம்பெறும் பட்டம் வழங்கப்படும். இந்த விதிமுறைகள் இணையவழி, தொலைநிலைப் படிப்புகளில் சேர்வோருக்குப் பொருந்தாது.