ஆன்லைன் முறையில், மாணவர்கள் எந்த அளவுக்கு பாடங்களை கற்றிருக்கிறார்கள்? என்பதை மதிப்பீடு செய்யும் பணியை பள்ளிக் கல்வித்துறை தொடங்கியுள்ளது.
முதல் கட்டமாக, பள்ளிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கணினி ஆய்வகங்களில், EMIS இணையதளம் வாயிலாக திறனறி சோதனை போல நடத்தி, ஆன்லைன் முறையில் அவர்களது கற்றல் திறன் மேம்பட்டுள்ளதா என மதிப்பீடு செய்யப்பட உள்ளது.
எந்தெந்த பாடப் பகுதிகளில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என ஆசிரியர்கள் திட்டமிடும் பொருட்டு இந்த மதிப்பீட்டுப் பணி மேற்கொள்ளப்படுகிறது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் பள்ளிகளுக்கு, பள்ளிக்கல்வித்துறை வழங்கியுள்ளது.