கல்லூரி முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்குவது குறித்து இன்னும் 2 நாட்களில் முடிவெடுத்து அறிவிக்கப்படும் என உயர்கல்விதுறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல் தெரிவித்துள்ளார்.
டிசம்பர் மாதம் முதல் இறுதியாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கும் வகுப்புகள் தொடங்குவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக அமைச்சர் அன்பழகன் கூறியுள்ளார்.
ஒரு வகுப்பறையில் 30 மாணவர்களை மட்டும் அமர வைக்கவும், ஷிப்டு முறையில் வகுப்புகள் நடத்தவும் திட்டமிடப்பட்டு வருகிறது.