தமிழகத்தின் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் மூலம் அரியர் தேர்வு நடத்துவதற்கான அட்டவணையை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரியர் தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக தாக்கலான மனுக்கள் மீது நடந்த விசாரணையில், அரியர் தேர்வு ரத்து செய்யப்பட்டது விதிமுறைகளுக்கு எதிரானது என அகில இந்திய தொழில்நுட்க கவுன்சில் ஏற்கனவே பதில் மனு தாக்கல் செய்திருந்தது.
இந்த நிலையில், தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் நடைபெற்ற விசாரணையில், மாணவர்கள் நலன் கருதியே அரியர் தேர்வு ரத்து செய்யப்பட்டதாக தமிழக அரசு அரசு சார்பில் பதில் தாக்கல் செய்யப்பட்டது.
தற்போது கொரோனா சூழல் மாறி உள்ளதால் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி பல்கலைக்கழகங்கள் தேர்வுகளை நடத்த முடிவு செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.