அண்ணா பல்கலைக்கழகம் உட்பட முதன்மையான பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்கள் மருத்துவப் படிப்புக்குச் சென்றுவிட்டதால் 276 இடங்கள் காலியாக உள்ளன.
அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாகக் கல்லூரிகள் மற்றும் முதன்மைப் பொறியியல் கல்லூரிகளில் அனைத்து இடங்களும் கலந்தாய்வு முடிவில் நிரம்பின.
மருத்துவக் கலந்தாய்வு தாமதமாக நடந்ததால், அண்ணா பல்கலைக்கழக வளாகக் கல்லூரிகள் மற்றும் முதன்மைப் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்த 276 மாணவர்கள் விலகி, மருத்துவம் மற்றும் பிற படிப்புகளில் சேர்ந்துள்ளனர்.
பொறியியல் கலந்தாய்வை முன்கூட்டியே முடித்ததும், மருத்துவக் கலந்தாய்வைத் தாமதமாகத் தொடங்கியதுமே இதற்குக் காரணம் என அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.