இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வில், நாளை முதல் 3 நாட்களுக்கு சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு நாளை கலந்தாய்வு நடக்கும். அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கான 7.5 சதவிகித உள்ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு வரும் 19, 20 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.
21 ஆம் தேதி முதல் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா கட்டுப்பாடுகளுடன் நடைபெறும் கலந்தாய்வில், தினமும் 3 கட்டங்களாக தலா 175 மாணவர்கள், கலந்து கொள்வார்கள்.
வெளி மாவட்டங்களில் இருந்து வரும் மாணவர்களுக்காக உணவு, வாகன வசதி, தங்கும் இடம் ஆகியன ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.