மருத்துவ உயர் சிறப்புப் படிப்புகளில், அரசு மருத்துவர்களுக்கு 69 சதவீத இட ஒதுக்கீட்டை கட்டாயம் அமல்படுத்த வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான அரசாணை வெளியிடப்பட்டிருப்பது மிகவும் காலதாமதமாக எடுக்கப்பட்ட முடிவு என சுட்டிக்காட்டி உள்ளார்.
ஒவ்வொரு முறையும் இடஒதுக்கீடு உரிமை யைப் போராடிப் பெற வேண்டிய சூழல் தமிழகத்தில் நிலவுவதாக மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். உள் இடஒதுக்கீடு என அறிவித்து 69 சதவீத இட ஒதுக்கீட்டை மறுத்திருப்பது, மன்னிக்க முடியாத துரோகம் என மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.