மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7 புள்ளி 5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கும் வரை கலந்தாய்வு நடத்தப்படாது என தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் நடைபெற்ற அதிமுக 49 ஆம் ஆண்டு துவக்க நிகழ்ச்சியில் பங்கேற்றப் பின் பேசிய அவர், 7.5 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்திற்கு ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில், 300க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள், மருத்துவப் படிப்பில் சேர வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.