இணையவழி கல்வியை மேற்கொள்ளும் உயர்கல்வி நிறுவனங்கள் நாக் அல்லது தேசிய தரவரிசையில் கட்டாயம் இடம்பிடிக்கவேண்டும் என்று பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) தெரிவித்துள்ளது.
யூஜிசி வெளியிட்டுள்ள புதிய நெறிமுறைகளின்படி உயர்கல்வி நிறுவனங்கள் தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று கவுன்சிலின் (NAAC) மதிப்பீட்டில் 3.26 மதிப்பெண் அல்லது தேசிய கல்வி நிறுவன தரவரிசையில் 100 இடங்களுக்குள் கட்டாயம் இடம்பெற்று இருக்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், யூஜிசியின் முன்அனுமதி இல்லாமல் தொடங்கப்பட்ட இணைய வழி கல்விக்கு அனுமதி வழங்க,
உயர்கல்வி நிறுவனங்கள் குறைந்தது 3 இளநிலை பாடப்பிரிவும், 10 முதுநிலை படிப்பும் தொடங்க வேண்டும் என்றும் புதிய நெறிமுறை வகுக்கப்பட்டுள்ளது.