நாடு முழுவதும் நேற்று நடைபெற்ற JEE Advanced தேர்வை, 96 சதவீதம் பேர் எழுதியதாக அந்த தேர்வை நடத்திய டெல்லி ஐஐடி தகவல் தெரிவித்துள்ளது.
ஐஐடி, என்ஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான JEE Advanced தேர்வுக்கு 1.6 லட்சம் பேர் பதிவு செய்திருந்த நிலையில், அந்த தேர்வு நாடு முழுவதும் 222 நகரங்களில், 1000 மையங்களில் நேற்று ஆன்லைனில் நடைபெற்றது.
கணிதம், இயற்பியல், வேதியியல் என 3 பிரிவுகளில் கேட்கப்பட்ட கேள்விகளில் கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்கள் கடினமாக இருந்ததாகவும், வேதியியல் பாடத்தில் இடம்பெற்ற பெரும்பாலான கேள்விகள் கடந்த ஆண்டில் கேட்கப்பட்டவை என்றும் தேர்வெழுதிய மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.