பள்ளிகள் திறப்பு குறித்து நாளை மறுநாள் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்துக்கு பின் முதலமைச்சர் தெளிவாக அறிவிப்பார் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கோபி அருகே நம்பியூரில், 26 லட்சம் மதிப்பில் சுற்றுச்சுவர் மற்றும் மேல்நிலை குடிநீர் தொட்டி அமைக்கும் பணி, குளம் தூர்வாரும் பணிகளின் பூமி பூஜையில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பள்ளிகள் திறப்பு குறித்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவேதும் பிறப்பிக்கவில்லை என்றும், சந்தேகங்களை தீர்த்து கொள்ள மாணவர்கள் விருப்பத்தின் பேரில் பெற்றோரிடம் அனுமதி பெற்று பள்ளிக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.