ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வுகள் இன்று நாடு முழுவதும் நடக்க உள்ளன. காலை 9 மணி முதல் 12 மணி வரையும், பிற்பகல் 2.30 மணி முதல் 5.30 மணி வரையும் தேர்வு நடக்கிறது.
ஏற்கனவே கடும் கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்படும் நிலையில் கொரோனா தொற்று காரணமாக நடப்பாண்டு கூடுதலாக வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. மாணவர்களின் பயண நேரத்தைக் குறைக்கும் வகையில் 600 ஆக இருந்த தேர்வு மையங்களின் எண்ணிக்கை ஆயிரத்து 150 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
தேர்வெழுத வரும் மாணவர்கள் புகைப்படங்களுடன் கூடிய ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, ரேஷன் கார்டு ஆகியவற்றில் ஒன்றை எடுத்து வரவேண்டும்.
முகக்கவசம், கையுறை ஆகியவற்றை மாணவர்கள் அணிய வேண்டும். ஒவ்வொருவருக்கும் இடையே 6 அடி இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். ஒவ்வொரு மாணவரும் தனிப்பட்ட முறையில் தண்ணீர் பாட்டில், கிருமி நாசினி கொண்டு வர வலியுறுத்தப்பட்டுள்ளது.