பொறியியல் கல்லூரிகளில் நேரடி 2ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டுதல்களை அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமமான AICTE வெளியிட்டுள்ளது.
ஏஐசிடிஇ உறுப்பினர் செயலர் ராஜீவ் குமார், மாநில அரசுகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், பாலிடெக்னிக் மற்றும் பிஎஸ்சி படிப்புகளில் குறைந்தபட்சம் 45 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் நேரடியாக 2ம் ஆண்டு பொறியியல் படிப்புகளில் சேரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பட்டியலினப் பிரிவினர் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்றால் போதுமானது என்றும், பட்டயப் படிப்பு முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
பிஎஸ்சி முடித்து சேர்க்கை பெறும் மாணவர்கள் மட்டும் முதலாமாண்டில் உள்ள பொறியியல் துறை சார்ந்த சில பாடங்களை 2ம் ஆண்டில் சேர்த்து படிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.