பல்வேறு வகையான கல்வி உதவித் தொகையை பெற விரும்பும் உயர்கல்வி மாணவர்கள் இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என்று பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில்,இந்திரா காந்தி இளநிலை கல்வி உதவித் தொகை, இளநிலை பட்டப்படிப்பில் பல்கலைக்கழக தரவரிசையில் இடம்பெற்ற நபருக்கான உதவித்தொகை, வடகிழக்கு மாணவர்களுக்கான இஷான் உதய் சிறப்பு உதவித் தொகை , இளநிலை தொழில்முறை பிரிவுகளில் பயிலும் எஸ்சி,ST உதவித் தொகைக்கு புதிதாகவும், ஏற்கனவே விண்ணப்பித்த மாணவர்கள் புதுப்பிக்கவும் www.scholarships.gov.in என்ற இணையதளத்தில் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.