மதிப்பெண் பட்டியல் அச்சடிப்பது உள்ளிட்ட இதர செலவினங்களுக்காகவே, ரத்து செய்யப்பட்ட செமஸ்டர் தேர்வுகளுக்கான கட்டணம் வசூலிக்கப்படுவதாக, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பா கூறியுள்ளார்.
கொரோனா ஊரடங்கால் இறுதியாண்டு தவிர்த்து மற்ற மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனாலும் ரத்து செய்யப்பட்ட செமஸ்டர் தேர்வுகளுக்கான கட்டணம் செலுத்த அண்ணா பல்கலை உத்தரவிட்டது.
எழுதாத தேர்வுக்கு ஒரு செமஸ்டருக்கு ஆயிரத்து 300 வீதம் 7 லட்சம் பேரிடம் 100 கோடி ரூபாய் வரை வசூலிப்பதாக புகார் எழுந்த நிலையில், துணைவேந்தர் இந்த விளக்கம் அளித்துள்ளார். அதே சமயம் கட்டணம் செலுத்தாத மாணவர்களின் தேர்ச்சி விவரங்களை அண்ணா பல்கலை அறிவிக்கவில்லை என கூறப்படுகிறது.