வரும் டிசம்பர் வரை பள்ளி, கல்லூரிகளைத் திறக்க வாய்ப்பில்லை என மத்திய கல்வி அமைச்சகத்தின் உயர்கல்வித் துறை செயலாளர் அமித் காரே தெரிவித்துள்ளார்.
மத்திய கல்வி அமைச்சகத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. அப்போது இதைத் தெரிவித்த அமித் காரே,கல்லூரி இறுதித் தேர்வுகள் திட்டமிட்டபடி இந்தாண்டு இறுதிக்குள் நடத்தப்படும் என தெரிவித்தார்.
416 கேந்திரிய வித்யாலயங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிக்குள் வருவதால் இந்த முடிவுக்கு மத்திய அரசு வந்துள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரம் zero academic year அறிவிக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் மாதம் வரை ஆன்லைன், சமூக ரேடியோ, தொலைக்காட்சி வாயிலாக வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டு, அது பற்றிய அறிவிப்பு அடுத்த 15 நாட்களுக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாநில பள்ளிகளைப் பொறுத்தவரை, கல்வியாண்டு தொடங்கப்படும் போது அந்தந்த மாநில அரசுகளே இறுதி முடிவு எடுக்கலாம் என கல்வி அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.