அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் ஆகஸ்டு 12ஆம் நாள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 26 வரை வாரத்தில் 6 நாட்கள் வகுப்புகள் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. நடப்பு பருவத்துக்கான தேர்வு அக்டோபர் 28 முதல் நவம்பர் 9 வரை நடைபெறும் என்றும், அடுத்த பருவத்துக்கான வகுப்புகள் டிசம்பர் 14ஆம் நாள் தொடங்கும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மாணவர்கள், பேராசிரியர்கள் ஆன்லைன் வகுப்புகளுக்குத் தயாராக வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.
தன்னாட்சிப் பொறியியல் கல்லூரிகள் ஆன்லைன் வகுப்புகள், தேர்வு தொடர்பாக அவைகளே முடிவெடுத்துக் கொள்ளலாம் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.