100 சதவீத கட்டணம் செலுத்தக்கோரி கட்டாயபடுத்தும் மெட்ரிகுலேசன் பள்ளிகள் குறித்து 8ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் தமிழ்நாடு மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக கடந்த 17ம் தேதி உயர்நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை மீறும்வகையில், சில பள்ளிகள் கட்டணம் கோருவதாக நீதிமன்றம் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதால், பள்ளிகல்வித்துறை எடுத்த நடவடிக்கை குறித்து வரும் 17ம் தேதி நீதிபதிகள் அறிக்கை கோரியிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டியிருப்பதால், உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மீறிய பள்ளிகளின் பட்டியல், அவை மீது எடுத்த நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கையை அனுப்பி வைக்கும்படி அவர் கோரியுள்ளார்.