புதிய கல்விக் கொள்கையின் படி, உயர்தரமான பாடங்கள் குறித்தும், அவற்றை கற்பிக்கவும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழு வடிவமைத்த புதிய கல்விக் கொள்கைக்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்நிலையில், புதிய கல்விக் கொள்கையின் கீழ் மாணவர்களுக்கு பாடம் எடுக்க, ஆசிரியர்களுக்கும் பயிற்சி தேவைப்படுவதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
உயர்தரமான பாடங்கள் குறித்தும், அவற்றை கற்பிக்கவும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் பலதுறை பாடங்களை கற்பிக்கும் கல்வி மையங்களாக மாறுவதால், B.Ed., M.Ed., Ph.D., படிப்புகளை வழங்கும் துறைகளை இடம்பெறச் செய்யவும் இலக்கு நிர்ணயிக்கப்படும் என ரமேஷ் பொக்ரியால் கூறியுள்ளார்.