2020-2021 கல்வியாண்டில் 179 கல்லூரிகள் மூடப்படுவதாக அனைத்திந்தியத் தொழில்நுட்பக் கல்விக் குழு தெரிவித்துள்ளது.
பொறியியல் கல்லூரிகள், வணிக மேலாண்மைக் கல்லூரிகளில் போதிய அளவில் மாணவர் சேர்க்கை இல்லாததால் 134 கல்லூரிகள் முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு ஒப்புதல் கோரவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.
இது தவிர 762 கல்லூரிகளில் பல பாடப்பிரிவுகளை நீக்கியதன்மூலம் 70 ஆயிரம் இடங்கள் குறைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. 2020-2021 கல்வியாண்டில் புதிதாக 164 கல்லூரிகள் தொடங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
ஆயிரத்து முந்நூறு கல்லூரிகளில் மொத்தம் ஒரு லட்சத்து 40 ஆயிரம் இடங்களை அதிகரித்துக் கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.