செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
கல்வி

கல்லூரிகளில் பருவத்தேர்வு ரத்து : கடந்த செமஸ்டருக்கான மதிப்பெண் கணக்கீடு எப்படி ?

Jul 25, 2020 05:56:10 PM

கொரோனா பேரிடர் காரணமாக, கல்லூரிகளில் பருவத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மதிப்பெண் எப்படி கணக்கிடப்பட உள்ளது என்பதை விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு.

தமிழகத்தில் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில், இறுதியாண்டு மாணாக்கர்கள் தவிர்த்து மற்ற மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதேசமயம், யுஜிசி வழிமுறைப்படி மதிப்பெண் வழங்கி, அடுத்த ஆண்டுக்கு மாணாக்கர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி முடிவெடுக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், ரத்து செய்யப்பட்ட செமஸ்டர் தேர்வுகளுக்கான மதிப்பெண் கணக்கீட்டு முறை குறித்து பல்கலைக்கழக மானியக் குழு வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.

முந்தைய நவம்பர் - டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வு மதிப்பெண்ணில் இருந்து 50 சதவீதமும், ஏப்ரல் - மே மாதத்துக்கான செமஸ்டரின் இன்டர்னல்  மதிப்பெண்களில் இருந்து 50 சதவீதமும் சேர்த்து கணக்கிட வேண்டும் என்று UGC வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

நவம்பர் - டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வை ஒரு மாணவர் எழுதாமல் இருந்திருந்தால், முழுமையாக ஏப்ரல் - மே மாத செமஸ்டரில் எடுத்த இன்டர்னல் மதிப்பெண்களைக் கொண்டு மதிப்பெண்களை வழங்கலாம் என்றும் UGC தெரிவித்துள்ளது.

இன்டர்னல் மற்றும் முந்தைய செமஸ்டர் அடிப்படையில் கணக்கிடப்பட்டு வழங்கப்படும் மதிப்பெண்களில் மாணவர்களுக்கு திருப்தி இல்லையென்றால், சூழல் சரியான உடன் நடத்தப்படும் சிறப்புத் தேர்வில் பங்கேற்று மதிப்பெண்களை உயர்த்திக் கொள்ளலாம் என்றும், அந்த மதிப்பெண்களே இறுதியானதாக கருதப்படும் என்றும் UGC தெரிவித்துள்ளது.

சூழல் சரியான உடன், நடத்தப்படும் சிறப்புத் தேர்வுடன், அரியர் தேர்வுகளும் நடத்தப்படும் என்பதால் அரியர் வைத்துள்ள மாணவர்கள் அப்போது எழுதி தேர்ச்சி பெறலாம் என்றும் UGC தெரிவித்துள்ளது.

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு மட்டுமே அரசின் செமஸ்டர் தேர்வு ரத்து என்ற அறிவிப்பு பொருந்தும் என்றும், மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு தேர்வை ரத்து செய்வது தொடர்பான முடிவை இந்திய மருத்துவக் கவுன்சில் எடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement
திண்டுக்கல்லில் அரசு கலைக் கல்லூரியில் மாணவிகள், பேராசிரியைகளை செல்போனில் படம் எடுத்த விவகாரம்
நீதிமன்ற வழக்கால் ஆசிரியர்கள் நியமனம் தாமதமாகி வருகிறது - அமைச்சர் அன்பில் மகேஸ்
"இளங்கலை பட்டப்படிப்பை முன்கூட்டியே படித்து முடிக்கும் புதிய முறை" - யு.ஜி.சி தலைவர்
2024-25ஆம் கல்வியாண்டுக்கான 10,11,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு
குரூப் - 4 பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதாக டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு
கல்வி, ஒழுக்கத்தில் சிறந்து விளங்கிய மாணவி.. ஒரு நாள் தலைமை ஆசிரியராக நியமித்து கௌரவம்..!
வகுப்புகளுக்கு மாணவர்கள் வராமல் தேர்வெழுத அனுமதிப்பதாக புகார்.. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் எச்சரிக்கை..!
மரத்தடியில் அமர்ந்து படிக்கும் மாணவர்கள்.. மழைக்காலத்தில் என்ன செய்யவார்கள்..? பெற்றோர்கள் வேதனை
அதிக அளவில் பெண்கள் உயர் கல்வி படிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவர்களுக்கு குறைந்த வட்டியில் கல்விக்கடன் வழங்கப்படும்
எல்.எல்.எம். முதுகலை சட்டப்படிப்பிற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் - அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவிப்பு

Advertisement
Posted Dec 24, 2024 in தமிழ்நாடு,Big Stories,

எம்.ஜி.ஆர். 37 வது நினைவுதினம்

Posted Dec 24, 2024 in இந்தியா,Big Stories,

மரம் அறுக்கும் எந்திரத்தால் வீடு புகுந்து கழுத்தை அறுத்த “டெலிவரி டேஞ்சர் பாய்”..! தனியாக இருக்கும் பெண்களே உஷார்

Posted Dec 24, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ராமேஸ்வரத்தில் குளிக்கிறீங்களா.. உடை மாற்றும் அறையில் உஷார் இருட்டில் சிமிட்டிய 3 கண்கள் ..! ஐ.டி . பெண் பொறியாளர் தரமான சம்பவம்..!

Posted Dec 22, 2024 in வீடியோ,Big Stories,

ஒத்த ஆளு மொத்த உயிரையும் காத்துருக்கா.. அவள் எங்கள் தெய்வம்..! பேருந்தில் மின்சாரம் பாய்ந்தது எப்படி ?

Posted Dec 22, 2024 in வீடியோ,Big Stories,

அவரு ஆபீசரா இருக்கலாம்.. அதுக்காக மகளை கேட்பாரா ?.. ஜெயிலருக்கு செருப்படி ஏன் ? ஏறி மிதித்து சட்டையை கிழித்த சம்பவம்


Advertisement