2019-ல் நடைபெற்ற சிவில் சர்வீஸஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று நேர்காணலுக்கு அழைக்கப்படாத 623 பேருக்கான நேர்காணல் தேதியை UPSC அறிவித்துள்ளது.
அத்தேர்வில் மொத்தம் 2 ஆயிரத்து 304 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் ஆயிரத்து 681 பேருக்கு நேர்காணல் நடத்தப்பட்ட நிலையில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், எஞ்சிய 623 பேருக்கான நேர்காணல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இவர்களுக்கு வரும் 30-ம் தேதிக்குள் நேர்க்காணல் நடத்தி முடிக்கப்படும் என்று UPSC அறிவித்துள்ளது. நேர்காணல் தேதி, நடைமுறை பற்றி தேர்வர்களுக்கு முன்கூட்டியே அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், நேர்காணலுக்கு வந்து செல்ல ஏதுவாக விமான வசதி ஏற்பாடு செய்து தரப்படும் என்றும் UPSC தெரிவித்துள்ளது.
தனி மனித இடைவெளியைப் பின்பற்றியும், முகக்கவசம், கிருமி நாசினி உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை பின்பற்றியும் நேர்காணல் நடத்தி முடிக்கப்படும் என்று UPSC தெரிவித்துள்ள